குடி போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபரீதம்: தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 2 இளம்பெண்கள் பரிதாப பலி..!

குடி போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபரீதம்: தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 2 இளம்பெண்கள் பரிதாப பலி..!


2 young women were tragically killed in a collision with a wrong-way car

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (23). ஆந்திர மாநிலம், சித்துார் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா (23). இவர்கள் இருவரும், செங்கல்பட்டு மாவட்டம், நாவலுார் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஹெச்.சி.எல், - ஐ.டி  நிறுவனத்தில் மென்பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் நாவலுார் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அலுவலகத்தில் பணி முடித்து வெளியே வந்தனர். சாலையோரம் நடந்து சென்றபோது, அங்கு அதிவேகமாக வந்த 'ஹோண்டா - சிட்டி' கார், இருவர் மீதும் பலமாக மோதியது. இந்த விபத்தில், லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்சியடைந்த அக்கம்பக்கத்தோர் விபத்துக்கு காரணமான காரை வழிமறித்து பிடித்தநர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த லாவண்யாவை மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துமனையில், லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை காவல்துறையினர், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த மோதீஸ்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குடி போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.