படுத்து தூங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல்.! பதறிப்போன பெற்றோர்.! அதிர்ச்சி சம்பவம்.!

படுத்து தூங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல்.! பதறிப்போன பெற்றோர்.! அதிர்ச்சி சம்பவம்.!


2 years boy kidnapped

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஊசி, பாசி, மணி விற்று பிழைப்பு நடத்துபவர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கு வசித்துவந்த அம்மாசை என்பவருக்கு திலகவதி என்ற மனைவியும், 2 வயது ஆண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அமாசையின் குழந்தைகள் 4 பேரும் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சாலையோரம் படுத்து தூங்கினர். அப்போது அவர்களது 2 வயது ஆண் குழந்தை திடீரென காணாமல் போயுள்ளான். இதனையடுத்து குழந்தை காணாமல் போனதால் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

child

பின்னர் அக்குழந்தையை கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் இரவு முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, இன்று காலை கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.