
பைக்கில் சென்றுகொண்டிருந்த இருவரை சோதனை செய்தபோது 13 லட்சம் பாதிப்புள்ள 4 கிலோ கொக்கைன் போதை பொருட்களை கடத்திச்சென்றது தெரியவந்துள்ளது.
பைக்கில் சென்றுகொண்டிருந்த இருவரை சோதனை செய்தபோது 13 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ கொக்கைன் போதை பொருட்களை கடத்திச்சென்றது தெரியவந்துள்ளது.
சென்னை செங்குன்றம் பகுதியில் போதை பொருட்களை சிலர் கடத்திச்செல்வதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குற்றப்புலனாய்வு போலீசார் செங்குன்றம் காவாங்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்வகையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தனர்.
போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் வந்த பைக்கில் 4 கிலோ மெத்த பெட்டமைன் போதைப்பொருள் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து குற்றப்புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் செங்குன்றத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் கணேஷ் என்பதும், இருவரும் போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இருவரும் மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திவந்த போதை பொருளின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 13 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இவர்களுக்கு போதை பொருள் எப்படி கிடைத்தது? யார் கொடுத்தது? யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.
Advertisement
Advertisement