காதல், தனிமையில் நெருக்கம்: 17 வயது சிறுமி கர்ப்பமானதால் காதலன் போக்சோவில் கைது.!17 years old Girl pregnant virudhunagar

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், ஆசிலம்பூரம் பகுதியைச் சார்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சூர்யா (வயது 23). அப்பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சார்ந்த உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், உறவினரின் 17 வயது மகளான சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் ஆட்கள் இல்லாதபோது காதல்ஜோடி தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். 

Virudhunagar

கடந்த சில நாட்களாகவே சிறுமியின் உடல்நலத்தில் ஏற்பட்ட மாற்றம் போன்றவற்றை கவனித்த பெற்றோர் அவரை மருத்துவமனை அழைத்து சென்றபோது சிறுமியின் கர்ப்பம் தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து விசாரணை நடத்தியதில் பரமசிவத்தின் மகன் சூர்யாவின் செயல் அம்பலமாகவே, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.