தமிழகம்

அவசர அவசரமாக 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர்.! முதலிரவில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Summary:

17 years old girl get married shown

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது கல்லூரிக்கு செல்லும் வழியில் பழக்கடை வைத்து நடத்தி வந்த சதிஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார் அந்த சிறுமி.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கு காரணமாக சிறுமி மற்றும் சதிஷ் வீட்டில் இருந்து வந்ததை அடுத்து இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். அதனை அடுத்து இவர்களின் காதல் உறவு சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் சிறுமியின் பெற்றோர் அவசர அவசரமாக தனது உறவுக்கார பையன் ஒருவருடன் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு பல கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் புதுமாப்பிள்ளை சென்றுள்ளார். அப்போது மனைவி தனது காதலனுடன் செல்போனில் பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் கணவர்.

அதன்பிறகு தான் மனைவியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து அங்கிருந்து யாருக்கு தெரியாமல் தப்பி சென்றுள்ளார் புதுமாப்பிள்ளை. பின் தனது காதலனுக்கு போன் செய்து தன்னை பார்க்க வருமாறு கூறியுள்ளார் அந்த சிறுமி. காதலியை கூப்பிட்டவுடன் சதிஷ்ம் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர் சதிஷை போலீசாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர். அதனை அடுத்து தனது காதலனை காப்பாற்ற நினைத்த சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று தன்னை தனது பெற்றோர்கள் கட்டாயம் திருமணம் செய்து வைத்ததாகவும், தனக்கு 17 வயது தான் ஆகிறது என்றும் கூறியுள்ளார். அதன்பின் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement