புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
50 ரூபாய் தரேன் வா..! 500 ரூபாய் கேட்ட இளம் பெண்..! உல்லாசமாக இருக்க சென்ற இடத்தில் நடந்த பகீர் சம்பவம்.!
17 வயது சிறுவன் ஒருவன் 35 வயது பெண் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் தெற்கு ரயில்வே காலனி குவார்ட்டர்ஸ் பகுதியில் இளம் பெண் ஒருவரின் முகம் சிதைக்கப்பட்டு, நிர்வாணமான நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் 17 வயது சிறுவன் ஒருவனின் பெயர் அடிபட்டதை அடுத்து அந்த சிறுவனிடம் போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அந்த சிறுவன் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கேன்டீனில் வேலை பார்த்துவந்த நிலையில் அந்த பகுதியில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம், இரவு நேரத்தில் சிலர் பணம் கொடுத்து உல்லாசமாக இருந்து வந்ததை கவனித்துவந்துள்ளான். இதை பார்த்த அந்த சிறுவனுக்கும் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆசை வந்துள்ளது.
இதனால், தன்னிடம் இருக்கும் 50 ரூபாய் பணத்தை காட்டி அந்த பெண்ணை யில்வே காலனி குவார்ட்டர்ஸ் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு சென்றதும், உல்லாசமாக இருக்க அந்த பெண் 500 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் 50 ரூபாய்தான் இருப்பதாக சிறுவன் கூறியதும் அந்த பெண் உல்லாசத்திற்கு மறுத்துள்ளார்.
மேலும், நீ சிறுவன் என்பதால் உனது பெற்றோரிடம், போலிஸாரிடமும் கூறிவிடுவதாக அந்த பெண் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் கல்லை போட்டு அந்த அந்த பெண்ணை கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.