கொடுமை... 17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய அக்கா கணவர்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை.!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடமாநில தொழிலாளி தனது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் தொழிலாளி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகாஸ் குமார். இவர் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கிராமத்தில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். மேலும் அதே பகுதியில் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரியுடன் வசித்து வந்திருக்கிறார் விகாஸ் குமார்.
கர்ப்பமான கொழுந்தியா
இந்நிலையில் விகாஸ் குமார் தனது மனைவியின் சகோதரியான 17 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவே அவரது சகோதரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது 17 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சி காவல்துறை அதிரடி... 600 போதை மாத்திரைகள் பறிமுதல்.!! 3 இளைஞர்கள் கைது.!!
போக்சோ சட்டத்தில் வழக்கு
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் விகாஸ் குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்... 3,000 ரூபாய்க்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூதாட்டி... இளைஞர் வெறி செயல்.!!