திருச்சி காவல்துறை அதிரடி... 600 போதை மாத்திரைகள் பறிமுதல்.!! 3 இளைஞர்கள் கைது.!!
திருச்சி நகரில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரகசிய கண்காணிப்பு
திருச்சி மாநகரின் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் திருவெறும்பூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காவல்துறையிடம் சிக்கிய போதைப் பொருள் கும்பல்
தளிப்படை காவலர்களின் தீவிர சோதனையின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவெறும்பூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்... 3,000 ரூபாய்க்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூதாட்டி... இளைஞர் வெறி செயல்.!!
போதை மாத்திரைகள் பறிமுதல்
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய பரிசோதனையில் 600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட திருச்சி காந்திநகர் ஐந்தாவது தெருவை சேர்ந்த அரவிந்த்(23), கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்(23) மற்றும் ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் மீது போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை அவர்களை சிறையில் அடைத்தது.
இதையும் படிங்க: ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ் 1 மாணவி பலாத்காரம்... 24 வயது இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!