இன்ஸ்டா காதலனை நம்பி ரூமுக்கு போன மாணவி கதறக்கதற நடந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் பேரதிர்ச்சி...!



17 Aged Minor Girl Sexual Abused by Instagram Lover at Kanyakumari

17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி நயவஞ்சகமாக விடுதிக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி, நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகம் செய்துவந்த நிலையில், அதன்மூலமாக சேலம் மாவட்டத்தில் உள்ள நாட்டுக்கோட்டையில் வசித்து வரும் தினேஷ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரித்துள்ளது. 

போனிலேயே பார்த்து பழகிய உன் முகத்தை நேரில் காணவேண்டும் என் அன்பே என அம்புவிட்ட தினேஷின் பேச்சில் மயங்கிய சிறுமியும் காதலனை காண ஆவல்பட்டுள்ளார். சம்பவத்தன்று சேலத்தில் இருந்து தினேஷ் கன்னியாகுமரி வந்துவிட, பள்ளி மாணவியோ பள்ளிக்கு செல்கிறேன் என்று வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். காதலியின் வருகைக்காக முன்னதாகவே விடுதியில் அறையெடுத்து தங்கிய காதலன், சிறுமியை அங்கு வரவழைத்துள்ளான். 

kanyakumari

விடுதியறையில் சிறுமியிடம் ஆசையாக பேசி தனது காம இச்சையை தீர்த்துக்கொண்ட கயவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளான். சிறுமியும் வீட்டிற்கு சென்றுவிட சில நாட்கள் காதலியுடன் நன்றாக பேசிய காமுகன், பின் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளான். இதனால் மனதுடைந்துபோன மாணவி பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறி கதறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் கயவனை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, மீண்டும் தினேஷிடம் சிறுமியை பேசவைத்த அதிகாரிகள் உல்லாசமாக இருக்க கன்னியாகுமரிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மாணவியின் அழைப்பை ஏற்ற தினேஷ் உல்லாச ஆவலுடன் கன்னியாகுமரி வர, அவரை அலேக்காக தூக்கிய காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.