தமிழகம்

ஆபாச படத்திற்கு அடிமையான தந்தை..! தந்தை பார்த்த அதே வீடியோவை பார்த்த 14 வயது மகன்..! உயிரைவிட்ட 9 வயது சிறுமி..!

Summary:

14 year boy killed 9 year girl kid

திருச்சி மாவட்டம் வீரப்பூர் கிராமம் அருகே பூப்பறிக்க சென்ற 9 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்பொழுது அவர் தலையில் பலத்த காயத்துடன் மல்லிகை தோட்டத்திற்குள் கிடந்துள்ளார். அவருக்கு பக்கத்தில் பெரிய கல் மற்றும் ரத்த காயங்களுடன் சட்டை ஒன்று கிடந்துள்ளது.இந்நிலையில் உயிருக்கு போராடிய சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, இரத்தக் கறையுடன் கல்லில் சுற்றப்பட்டிருந்த அந்த சட்டை, அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுடையது என தெரியவந்தது. பின்னர் அவனை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சிறுமியை கொன்றதை ஒத்துக் கொண்டார். மேலும் விசாரணையில் அந்த சிறுவனின் தந்தை சமூகவலைதளத்தில், யூட்யூபில் அடிக்கடி ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். அவர் அப்படியே செல்போனை வைத்துவிட்டு சென்ற நிலையில் அந்த சிறுவனும் அதனை கண்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வீடியோவை போன்றே நிஜத்தில் செய்ய வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்ட நிலையில், தனது வீட்டின் அருகே வசிக்கும் சிறுமியின் பின்னால் சென்று அவரிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி  இதுகுறித்து தனது தாயிடம் சொல்லப்போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு பயந்த சிறுவன் மற்றொரு படத்தில் பார்த்தது போன்று,அருகில் இருந்த கல்லால் சிறுமியின் தலையில் அடித்துள்ளார். 

பின்னர் சட்டையில் ரத்தக்கறை இருந்த நிலையில் அதனை கழற்றி, கல்லோடு சேர்த்து அங்கேயே புதைத்துவிட்டு தப்பியோடியுள்ளான் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement