BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
#JustIN: பள்ளி வளாகத்தில் +2 மாணவி மர்ம மரணம்.. பள்ளி நிர்வாகத்தின் பதில்., கொந்தளிக்கும் உறவினர்கள்..!!
மாணவி மூன்றாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், மகளின் இறப்பில் சந்தேகமுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் திவ்யா கணியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். விடுதியில் தங்கியவாறு மாணவி படித்து வந்த நிலையில், இன்று காலை மர்மமான முறையில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் உடலை மீட்ட பள்ளி நிர்வாகம் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வுக்காக மாணவியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெற்றோரின் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே குறித்து தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெற்றோர் இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளாமல் தனது மகள் அவ்வாறெல்லாம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்றும், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.