3 மாத முன்விரோதத்தால் மாணவரை கத்தியால் வெட்டிய இளைஞர்... கிண்டலடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

3 மாத முன்விரோதத்தால் மாணவரை கத்தியால் வெட்டிய இளைஞர்... கிண்டலடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!


12th-student-attempt-murder-case

மூன்று மாதங்களுக்கு முன்னதாக தன்னை கத்தியால் வெட்டிய மாணவனை, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்தபோது, இளைஞர் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அதே பகுதியில் வசித்துவந்த 17 வயது சிறுவனை கிண்டலடித்து வந்துள்ளார். 

இதனால் ஆவேசமடைந்த சிறுவன் கடந்த மார்ச் மாதம் கார்த்திக்கின் பின்தலையில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். பின் இது குறித்து இளைஞரின் புகாரில் பேரில், சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக பரோலில் பெற்றோர்களால் அழைத்து வரப்பட்டார்.

chennai

இந்த நிலையில், கார்த்திக் வெகுநாட்களாக இதனை முன் விரதமாகக் கொண்டு, பொதுத்தேர்வு எழுதவந்த சிறுவனை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதை தொடர்ந்து, காவல்துறையினர் கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.