தமிழகம்

நீட் தேர்விற்கு படிக்க வற்புறுத்திய தந்தை.. மகன் எடுத்த விபரீத முடிவால் சோகத்தில் குடும்பத்தினர்!

Summary:

12th std student suicide for forcing to prepare neet exam

கோவை அருகே 12 ஆம் வகுப்பு முடித்த மகனை தந்தை நீட் தேர்விற்காக படிக்க வற்புறுத்தியதால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகர் பகுதியியை பாஸ்கர் (51). இவரது மூத்த மகன் சரண் பாலாஜி என்பவர் இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். 

நீட் தேர்வுக்கு தயாராகுமாறு தந்தை சொன்னதால் மகன் தற்கொலை

இதனை தொடர்ந்து மகனை மருத்துவ படிப்பில் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தந்தை பாஸ்கர் சரனிடம் நீட் தேர்விற்கு தயாராக படிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சரண் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல கனவுகளுடன் 12 ஆம் வகுப்பு தேர்வினை எழுதி முடிவுக்காக காத்திருந்த மகன் இறந்ததால் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.


Advertisement