ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஜனவரி 20-க்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த அதிரடி உத்தரவு..!
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் பொதுதேர்வு கட்டணத்தை ஜனவரி மாதம் 20-ம் தேதிக்குள் செலுத்த பள்ளிகல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் பொதுத்தேர்வு கட்டணத்தொகையை பெற்று ஜனவரி மாதம் 20-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும், அரசுதேர்வுகள் இயக்கத்திற்கு இணையதளம் மூலமாக செலுத்தி விட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இணைய வழிகட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சந்தேகம் போன்றவற்றுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு தேர்வுகள் இயக்க ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளை அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.