12 வயது சிறுமி கத்தி முனையில் கடத்தல்... தாய் கண்முன் நடந்த பயங்கரம்.. நாமக்கல்லில் பேரதிர்ச்சி.. தாய் பரிதவிப்பு.!
12 வயது சிறுமி கத்தி முனையில் கடத்தல்... தாய் கண்முன் நடந்த பயங்கரம்.. நாமக்கல்லில் பேரதிர்ச்சி.. தாய் பரிதவிப்பு.!

6ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை கத்தி முனையில் கடத்திய மர்ம நபர்களை, காவல்துறையினர் 6 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் சரவணன்-கவுசல்யா தம்பதியினர். இவர்களுக்கு மவுலனிசா என்ற ஒரு மகளும், ஜெய்சன் என்ற மகனும் உள்ளனர். இதில், மவுலனிசா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தொடந்து சரவணன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது கௌசல்யாவும் மவுலனிசாவும் வீட்டிற்குள் மிகவும் புழுக்கமாக இருந்த காரணத்தால், மாடியில் உள்ள கட்டிலில் காற்றோட்டமாக உறங்கியுள்ளனர். மேலும், அவர்களுடன் மவுலனிசாவின் தம்பியான ஜெய்சனும் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் இவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய நிலையில், கௌசல்யா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துள்ளனர். தொடர்ந்து கௌசல்யாவையும், ஜெய்சனையும் கட்டிப்போட்டுவிட்டு, சிறுமியை மட்டும் கடத்தி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சிறுமியை மீட்பதற்காக 6 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.