OMG: பட்டபகலில் ஓடும் பேருந்தில் பீர் குடித்து விட்டு மாணவிகள் அட்டகாசம்... கல்வித்துறை விசாரணை.!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் வல்லிபுரத்தை கிராமத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவிகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு செங்கல்பட்டிருந்து தச்சூர் நோக்கி செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது மாணவி ஒருவர் பொது இடம் என்று கூட பாராமல் அசல்டாக ஓடும் பேருந்தில் பீர் பாட்டிலை கையில் எடுத்து குடிக்க அதனை மற்ற மாணவிகளும் வாங்கி மாறி மாறி குடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பொது மக்கள் மற்றும் சக மாணவர்கள் சூழ்ந்து நிற்க எதை பற்றியும் கவலைப்பாடாமல் பீர் குடித்து விட்டு மாணவிகள் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி ரகளையில் ஈடுபட்ட மாணவிகளை தனித்தனியாக அழைத்து அறிவுரை கூறி எச்சரிக்க திட்டமிட்டுள்ளனர்.மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களையும் தனி தனியாக விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.