ஏரியில் மண் அள்ளிய போது தோண்ட தோண்ட கிடைத்த டைனோசர்களின் முட்டைகள்.!



12 crore years ago dinosaurs egg in perambalur

பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏரியில் மண் எடுக்க தோண்டியபோது, உள்ளே புதைந்திருந்த டைனோசர் முட்டை மற்றும் கடல்வாழ் உயிரின படிமங்கள் வெளிப்பட்டு உள்ளது. 

dinosaurs egg

அங்கு பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்ற உருவங்களில் ஏராளமாக கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அங்கு கிடைத்த கடல்வாழ் நத்தைகளின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். 

அந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் மற்றும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் தலைமுறைக்கு இப்பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்பதற்கான சான்றாக, இதனை பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த பகுதியை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.