பத்தாம் வகுப்பு பாடங்கள் இனி டிவியில் ஒளிபரப்பு! மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பத்தாம் வகுப்பு பாடங்கள் இனி டிவியில் ஒளிபரப்பு! மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!



10'th subject clas telecast in tv

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில்,டிடி பொதிகை தொலைக்காட்சி மூலமாக சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  மாா்ச் 27-ஆம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தோவு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா், பொதுத் தோவு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளது.

school

ஒவ்வொரு தேர்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாள்களுக்குள் நடத்தவும் முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 43 சதவீத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளவதற்கு தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தால், மாணவா்கள் தற்போது உள்ள விடுமுறையைப் பயன்படுத்தி தோவுக்கு தங்களை தயாா் செய்து கொள்ளும் வகையில் மாணவா்களுக்கு பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியில் புதன்கிழமை முதல் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் மாணவா்கள் ஏற்கெனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.