பள்ளி, கல்லூரி பேருந்துகள் மோதல்!.. 10 பேர் படுகாயம்!.. வெளியான சி.சி.டி.வி காட்சிகளால் பரபரப்பு..!

பள்ளி, கல்லூரி பேருந்துகள் மோதல்!.. 10 பேர் படுகாயம்!.. வெளியான சி.சி.டி.வி காட்சிகளால் பரபரப்பு..!


10 injured in school-college bus collision

திருச்சி மாவட்டம், சமயபுரம் அர்கேயுள்ள கூத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து, நேற்று காலை ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சுமார் 50 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தி கண்ணன் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்தார்.

ஸ்ரீரங்கம்-திருவானைக்கோவில் பாலத்தை கடந்து கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து, அதிவேகமாக சென்றது. அப்போது, சாலையோரத்தில் நின்ற ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. மேலும், எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி பேருந்தின் மீது அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில், 3 மாணவர்கள் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்ததுடன் காயமடைந்தவர்களை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.