தாயின் கண் முன்னே பள்ளி வேன் ஏறி ஒரு வயது குழந்தை பலி!

தாயின் கண் முன்னே பள்ளி வேன் ஏறி ஒரு வயது குழந்தை பலி!


1-yeras-old-child-death-in-van

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு மேற்கு தெருவில் வசித்து வருபவர் சௌந்தர். முந்திரி வியாபாரம் செய்து வரும் இவருக்கு வசந்தி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 1 வயதில் ரக்சன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில், 5 வயது மகன் காடாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான்.

Cuddalore

இதில் சிறுவன் தினமும் பள்ளி பேனில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சிறுவனை அழைத்து செல்வதற்காக வீட்டு வாசலில் வந்து பள்ளி வேன் நின்றது. அப்போது வசந்தி 2 குழந்தைகளையும் வீட்டில் இருந்து அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்த வசந்தி முதல் மகனை வேனில் ஏற்றி விட்டுள்ளார்.

இதனிடையே ஒரு வயது ரக்சன் வேனுக்கு அடியில் சென்று விளையடியுள்ளான். இதனை வேன் டிரைவரும், வசந்தியும் கவனிக்கவில்லை. இதனையடுத்து வேன் புறப்பட்டு சென்றபோது மகனுக்கு வசந்தி டாட்டா காட்டியுள்ளார். அப்போது திடீரென ரக்ஷனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

Cuddalore

இதில், வேனிற்க்கு அடியில் விளையாடிக் கொண்டிருந்த ரக்ஷன் தலை மீது பள்ளி வேன் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்ணீரில் கரைய வைத்தது.

இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேன் ஓட்டுனரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.