அயன் பட ஸ்டைலில் திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட1 கிலோ தங்கம்... 2 பேர் கைது... காவல்துறை தீவிர விசாரணை.!1-kg-of-gold-caught-at-trichy-airport-2-people-arrested

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து ஒரு கிலோ தங்கம்  கடத்தி வந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், கொழும்பு  போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. நேற்று நள்ளிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தின் பயணிகளுக்கு சுங்கத்துறை மற்றும் நுண்ணறிவு சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

tamilnaduஅப்போது இரண்டு பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருக்கவே அவர்கள் இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வயிற்றில் தங்கத்தை வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சையின் மூலம் உடலில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

tamilnaduஅவர்கள் இருவரும் சேர்ந்து 1.188 கிலோ தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 70 முதல் 72 லட்ச ரூபாய் வரை இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த இரண்டு பயணிகளிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.