உடுப்பி திருவிழாவில் விஜய் டான்ஸ்? நேரில் பார்த்து வீடியோ எடுத்த மக்கள்! ஆனால் உண்மை பின்னணி என்ன தெரியுமா? வைரல் வீடியோ...!!!



vijay-lookalike-udupi-vittalapindi-festival

கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற விட்லபிண்டி திருவிழாவில் நடிகர் விஜய்யை அச்சு அசலாகப் போன்ற நபர் ஒருவர் பங்கேற்று கவனம் ஈர்த்துள்ளார். பாதுகாப்புக் காவலர்கள் புடைசூழ, திறந்தவெளி வாகனத்தில் அவர் ஊர்வலமாக வந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இதைப் பார்த்த பலரும் முதலில் நிஜமான விஜய்தான் விழாவுக்கு வந்துவிட்டதாக நினைத்துள்ளனர்.

விஐபி பாணியில் வலம் வந்த விஜய் போன்ற நபர்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உடுப்பியில் ஆண்டுதோறும் விட்லபிண்டி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழாவிலும் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், விஜய்யை போலவே தோற்றமளித்த நபர் ஒருவர் கருப்பு உடையில் பாதுகாப்புக் காவலர்கள் சூழ திறந்தவெளி வாகனத்தில் ரதபீதி பகுதி வழியாக வலம் வந்தார்.

இதையும் படிங்க: அப்பா! என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போங்க... எனக்கு இங்கு சிகிச்சை வேண்டாம்! மருத்துவமனையில் கதறிய மகள்! தந்தை கண் முன்னே இறுதியில் நடந்த அதிர்ச்சி.... கலங்க வைக்கும் காட்சி!!!

முன்னதாக கருப்பு நிற வாகனங்கள் செல்ல, பின்னால் வந்த திறந்தவெளி வாகனத்தில் நின்றிருந்த அவர் சாலையோரம் திரண்டிருந்த மக்களை நோக்கி கைகளை அசைத்தார். ஒரு கட்டத்தில் விஜய் பாணியிலேயே உற்சாகமாக நடனமாடியதும் அங்கிருந்தவர்களின் கவனத்தை மேலும் ஈர்த்தது.

நிஜ விஜய் என நினைத்து வீடியோ எடுத்த மக்கள்

விஜய்யின் தோற்றத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால், அங்கு கூடியிருந்த பலர் அவர் நடிகர்தான் என நினைத்து தங்களது செல்போன்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்தனர். பின்னர் அவர் விஜய் அல்ல, அவரைப் போன்ற தோற்றம் கொண்ட நபர் என்பது தெரியவந்தது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்

விழாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதும் வேகமாக வைரலாகின. விஜய் லுக்கலைக் குறித்து இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இது போலி விஜய் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது தோற்றம் மற்றும் நடன அசைவுகள் குறித்தும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. வைரல் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

 

இதையும் படிங்க: என்னால டார்ச்சல் தாங்க முடியல... எனக்கு சாகனும் போல இருக்கு! அந்த டிரெஸ்ஸை அம்மா தான் வாங்கித் தந்தாங்க.... ! யூடியூப் லைவில் உண்மையை போட்டு உடைத்து கண்ணீருடன் கதறிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்!!!