இந்தியா ஆன்மிகம்

மனிதர்களை போல ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்களையும் பேச வைக்க போகிறேன். சுவாமி நித்தியானந்தா பரபரப்பு பேச்சு.

Summary:

suvamy nithiyanantha speech

சுவாமி நித்தியானந்தா மிகவும் பிரபலமானவர் அவரை  தெரியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது.  அந்த  அளவுக்கு சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்திகளில் முதன்மையானவராக திகழ்ந்தார்.  

தற்பொழுது ,  மனிதர்களைப் போலவே ஆடு ,  மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்க உள்ளதாக சர்ச்சைக்கு உரிய சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

தனது ஆசிரமம் அமைந்திருக்கும்  கர்நாடகவில் உள்ள  பிடதியில் தன் சீடர்களுடன்  அவர் உரையாற்றும் காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அப்போது  அவர், 
விலங்கினங்களுக்கும்  மனிதர்களுக்கும்  உள்ளுறுப்புகளில் ஒரு  சில வேறுபாடுகள் உள்ளது என்றும்,  இதில் குரல்வளத்துக்கு காரணமான தொண்டையின் உள்பகுதியை சரிப்படுத்தி விட்டால் சிங்கம், புலி ஆகியவற்றை பேச வைக்கலாம் என்பதை தெரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார்.


Advertisement