நிறம் மாறும் கருவறை மண்.! மணலை பிரசாதமாக தரும் மர்ம கோயில்.? தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா.!?



News about kanniyakumari nagarajan temple

நாகராஜசுவாமி திருக்கோயில்

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில்களிற்க்கும் தனிச்சிறப்பும், வரலாற்று பின்னணியும் இருக்கும். அந்த வகையில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள நாகராஜ சுவாமி திருக்கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்பட்டு வருகிறது. சிறப்பு அம்சங்களையும் வித்தியாசமான வழிப்பாட்டு முறை பற்றி இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்

கோயிலை பாதுகாக்கும் நாகம்

முற்றிலும் நாகராஜாவிற்கென்று அமைக்கப்பட்ட இக்கோயிலின் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக நாகராஜன் ஐந்து தலைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நாகராஜா சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ள தூணில் நாக கன்னி சிற்பமாக காட்சியளிக்கிறார். இக்கோயிலில் பல இடங்களில் நாகங்கள் வசித்து வருவதாகவும், இக்கோயிலை நாகங்களை இப்போதும் பாதுகாத்து வருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: முன்ஜென்ம பாவங்களைப் போக்கி நன்மையை தரும் எறும்பீஸ்வரர் கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?

temple

நிறம் மாறும் மண் 

மேலும் மூலஸ்தானத்தில் மணல்மேடுகளின் மேலேயே நாகராஜா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல்மேடுகள் அந்த காலத்தில் வயல்வெளி இருந்த இடமாகும். எனவே இந்த மூலஸ்தானத்தில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும். இந்த நீருடன் சேர்ந்த கருவறை மணலையே பக்தர்களுக்கு இக்கோயிலின் பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரசாத மணலை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் சகல நோய்களும் நீங்கி வீட்டில் நன்மை உண்டாகும் என்று நம்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த மூலஸ்தானத்தில் கருவறையில் உள்ள மண் ஆடி முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை முதல் ஆணி வரை வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. மணல் எவ்வாறு எப்படி நிறம் மாறுகிறது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

இதையும் படிங்க: "உலகிலேயே அஷ்டம சனியை போக்கும் ஒரே கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது" எங்கு தெரியுமா.!?