"உலகிலேயே அஷ்டம சனியை போக்கும் ஒரே கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது" எங்கு தெரியுமா.!?



News about astama sani thosam temple

அஷ்டம சனியை போக்கும் அகஸ்தீஸ்வரர் கோயில்

பொதுவாக சனி தோஷத்தை போக்குவதற்கு உள்ள கோயிலாக அனைவரும் கூறப்பட்டு வருவது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் தான். ஆனால் உலகிலேயே அஸ்டம சனி தோஷத்தை போக்குவதற்காக இருக்கும் அற்புதமான விசேஷ கோயிலாக கருதப்படுவது, புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள அறந்தாங்கி என்ற ஊரில் அமைந்துள்ள எட்டியத்தள்ளி அகத்தீஸ்வரர் கோயில் தான்.

astrologer

அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட கோயில்

குறிப்பாக அஷ்டம சனி தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை நவகிரகங்களின் அருகில் வைத்து பூஜை செய்யும் வழக்கம் இக்கோயிலில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட இக்கோயில் சனிதோஷத்தை போக்குவதற்கென்று சிறப்பான கோவிலாக இருந்து வருகிறது. மேலும் களத்திர தோஷம் இருப்பவர்களும் இக்கோயிலில் வந்து பரிகாரம் செய்வதால் தோஷம் நீங்கும்.

இதையும் படிங்க: வருடத்திற்கு 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் மர்ம கோயில்.! எங்குள்ளது தெரியுமா.!?

இக்கோயில்

உருவான வரலாறு

அகத்திய முனிவர் ராமேஸ்வரம் சென்று கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து விட்டதால் பூஜை செய்வதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தார். அப்போது அங்கு குளமும், ஒரு லிங்கமும் தெரிந்துள்ளது. அக்குளத்தில் உள்ள தண்ணீரை எடுத்து லிங்கத்திற்கு பூஜை செய்துவிட்டு அங்கேயே தங்கி விட்டார். அந்த நேரத்தில் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்ட தொண்டை மண்டலத்து மன்னன் காளிங்கராயன் திருநள்ளாறு செல்லும் வழியில் இக்கோயிலில் இருந்த அகத்திய முனிவரை சந்தித்தார்.

astrologer

பின்னர் மன்னரிடம் தோஷம் நீங்க வேண்டுமானால் ஒரு கோயில் எழுப்பி அங்கு அகத்தியர் வழிபட்ட லிங்கத்தை வைத்து பூஜை செய்ய சொன்னார். இவர் செய்த காளிங்கராயன் அஷ்டம சனி தோஷத்தில் இருந்து விடுபட்டதால் இக்கோயில் அகஸ்தீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இக்கோயிலில் அமைந்துள்ள தட்சணாமூர்த்தியை கல்யாணம் தட்சிணாமூர்த்தி என்று அழைத்து வருகின்றனர். இவரை வழிபட்டு பூஜை செய்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் ஆகும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: 150 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலை பாதுகாக்கும் அதிசய முதலை.! இக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?