பிரிந்த தம்பதிகள் சேர, நாள்பட்ட கடன் தீர கட்டாரிமங்கலம் ஸ்ரீ நடராஜர் கோயில் வழிபாடு.!



Kattaramangalam Sri Natarajar Temple A Sacred Place to Reunite Separated Couples and Clear Debts

கட்டாரிமங்கலம் ஸ்ரீ நடராஜர் கோயில் தலவரலாறு.

பேய்குளம்:

Kattaramangalam Natarajar Kovil: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், பேய்குளம் கிராமத்தில், கட்டாரிமங்கலம் நடராஜர் கோயில் உள்ளது. முற்காலத்தில் பேய்கள் வாழ்வது போன்ற பயங்கர தோற்றத்துடன் இருந்த காடாக இருந்த பகுதி வழிப்போக்கர்களால் பேய்குளம் என்று அழைக்கப்பட்டு, பின் அதுவே அதன் அடையாளமாகிப்போனது. இந்த கிராமத்தில் இருக்கும் நடராஜர் கோயிலை கட்டிய வீரபாண்டிய மன்னார், கொடிமரம் நடுவதற்கு யாகமும் செய்துள்ளார். அப்போது, ஐந்து தேவதைகளை கொடிமரத்தில் அமரவைத்து, ஊர்மக்கள் கூடி யாகம் செய்து அழைத்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்னுமா இது மாறல? புத்தாண்டுக்கு தேதி பார்த்து, மறுநாள் குவிந்த நோயாளிகள்.. டாக்டர் வேதனை.!

தேவதைகள்:

இந்த சமயத்தில் பக்கத்து ஊர் மக்களும் தேவதைகளை ஊருக்கு காவல் தெய்வங்களாக கேட்டு, அதனையும் செய்து இருக்கின்றனர். இதனால் காட்டாரிமங்கலம், அம்பலசேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்குளம் ஆகிய ஐந்து கிராமங்களுக்கு தேவதைகள் காவல் தெய்வமாக இருக்கின்றனர். தேவதைகளை வேதபண்டிதர்கள் கொடிமரத்துக்கு கொண்டு வர முயற்சித்தும் முதலில் பலனில்லை. பின் ஊர் மக்களின் அன்புக்கேற்ப அவர்கள்கவல் தெய்வமாக இருந்துள்ளனர். ஆனால், தேவதை இல்லாத கொடிமரத்தை கோயிலில் வைக்காத காரணத்தால், காட்டாரிமங்கலத்தில் கொடிமரம் இல்லை.

Spiritual

சிவபக்தர்:

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் என்ற முறையில், பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டன் என்ற சிவபக்தர் இப்பகுதியில் மடம் ஒன்று அமைத்துள்ளார். பின் ஊரில் சத்திரம் நிறுவப்பட்டு குழந்தைகள் பால் அருந்த பசுக்களை வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்த பகுதி பசுமடம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் இங்கு தங்கியிருந்த சித்தர் எப்போதும் சிவபூஜை செய்து வந்துள்ளார். சிவன் மீது அதிக பிரியம் கொண்டவர், ஆடித்தபசு காண சங்கரன்கோவில் சென்று வருவார். ஒருமுறை தபசு காலத்தில் அங்கு சென்றுவர முடியவில்லை.

காட்சிதந்த சிவன்:

இதனால் வருத்தத்தில் இருந்தவர் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி-ஸ்ரீ கோமதி அம்மாளை நினைத்து தியானம் செய்துள்ளார். இதனால் சங்கரன்கோவில் தவசு காட்சி தெரிந்தது. ஆனந்தமடைந்த சிவபக்தர், சின்ன சங்கரன்கோவில் என்று கோயிலை அழைத்து, தன்னைப்போல அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தரவேண்டும் என சிவனிடம் வேண்டினார். இறைவனும் ஆசியை வழங்கிவிட்டு மறைய, ஆடிமாதத்தில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சங்கரன்கோவில் செல்ல முடியாதவர்கள், இங்கு சென்றும் வணங்கலாம்.

திருவிழா கொண்டாட்டம்:

தற்போது இந்த கோயில் ஸ்ரீ நடராஜப்பெருமான், ஸ்ரீ சிவகாமியம்மன், மாணிக்கவாசகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ வள்ளி சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ சாஸ்வரர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ பைரவர் ஆகியவர்களும் உள்ளனர். இந்த கோயிலில் இருக்கும் வேம்பு சிறப்பு வாய்ந்தது. வேம்பின் அடியில் இருக்கும் புற்றில் சாஸ்தா சந்நிதி இருப்பதால், பால்-பழம் படைப்பது நாகதோஷத்தை நிவர்த்தி செய்யும். தற்போது 10 நாட்கள் திருவிழாவாக ஆடித்தபசு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மண்டகப்படியும் ஊர்களுக்கு வழங்கப்படும். சீர்வரிசையுடன் அம்மாளை அழைக்க செல்லும்போது உள்ளூரில் விளையும் கடலை, உளுந்து, பருத்தி பொருட்களை மக்கள் வீசி எறிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இதனால் விளைச்சல் அதிகமாகும் என நம்பிக்கை.

இந்த கோயிலில் திருமணம் நடந்தால், தம்பதிகள் இன்பத்துடன் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. உள்ளன்புடன் பிரார்த்தனை செய்தால் அது நிறைவேறும். விவசாயம் மேம்பட, நாள்பட்ட கடன்தீர, பிரிந்த தம்பதிகள் சேர, விவகாரத்து முடிவு மாற இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.

 

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து தூக்கிய கார்.. கர்ப்பிணி பெண் துடிதுடிக்க பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!