கொடுப்பதில் கிடைக்கும் அலாதி பலன்.!!

கொடுப்பதில் கிடைக்கும் அலாதி பலன்.!!



By donating, every man becomes holy

தானம் செய்வதின் மூலம் ஒவ்வொரு மனிதனும் புனிதம் ஆகிறான் என்பது சீதையின் கருத்து. தற்போதும் கூட ஏற்படும்  திடீர் பஞ்சம், தீவிபத்து, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களுக்கு தன்னால் இயன்ற உணவு, மருத்துவ உதவி, , கல்விதானம்,  போன்றவை தானங்கள் செய்பவருக்கு மோட்சம் கிட்டும்.

அவ்வை, ‘‘தானமும் தவமும் செய்பவராயின் வானவர் நாடுவழி திறந்திடுமே’’ என்று மொழிந்துள்ளார். மகாபாரதமும் இந்தக் கலியுகத்தில், தானம்தான் சிறந்த மோட்சம் தரும் என்று  கூறுகிறது. இஸ்லாமியமும், ‘‘சொர்க்கம் செல்வதற்கு பிரதான வழியாக இருப்பது தானமேயாகும்’’ என்று கூறுகிறது.

பணம், பதவி, என்று சேர்த்துக்கொள்வதற்காக மனிதன், பேய்யாக திரிந்து படாதபாடு படுகிறான். எந்த உழைப்பில் சிறிதளவேனும் மனத் தூய்மைக்கு என்று மனிதன் மேற்கொள்வானேயாகில் வம்பும், வழக்கும், சண்டையும் துன்பமும், துயரமும் சமுதாயத்திலிருந்து பெரிதும் நீங்கும்.