பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ராகு, கேது தோஷம் நீங்கி திருமணம் நடைபெற இந்த கோயிலுக்கு சென்று பாருங்கள்.!?
சித்த லிங்கேஸ்வரர் கோயில்
கோவையில் இருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சொண்ணாம்பிகை உடனமர் நவபாஷாண சித்தர் லிங்கேஸ்வரர் கோயில். உலகிலேயே நவபாஷாண சித்தலிங்கம் இந்த கோயிலில் தான் உள்ளது என்பது தனி சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக இரவில் சிவசக்தி யாக பூஜையும், ஞாயிறு மாலை நேரத்தில் வேள்வி பூஜையும் நடைபெறுகிறது.
கோயிலின் தனி சிறப்புகள்
சித்தலிங்கேஸ்வரர் கோயிலின் இரவு நேரத்தில் நடக்கும். சிவசக்தி யாக பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு திருமண தடை நீங்கும். தேய்பிறை மற்றும் பௌர்ணமி நாட்களில் இக்கோயிலில் அமைந்துள்ள பைரவருக்கு அபிஷேகம் செய்து வந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். காரிய தடை நீங்கும்.
பலன்கள்
சித்தலிங்கேஸ்வரர் கோயிலில் சன்னதியை மனதார வழிபட்டு வலம் வந்தால் திருவண்ணாமலை கோயிலில் கிரிவலம் வந்த பலன் கிடைக்கும். ஜாதகரீதியான தோஷம் உள்ளவர்களுக்கு இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ராகு, கேது, செவ்வாய், சனி போன்ற கிரகங்களின் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் அமைந்துள்ள காளத்தி நாதருக்கு பரிகார பூஜை செய்வதால் தோஷம் நீங்கும்.