சைக்கோவை காதலித்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கை-கால்கள் கட்டி எரித்துக்கொலை.! 



Andhra Pradesh Shocker: Lover Arrested for Allegedly Killing Woman and Burning Her Body

காதலிக்கு காதலனால் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதல்: 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்நாடு, கரம்புடி, இன்பராஜு பள்ளியில் வசித்து வருபவர் பாலா ஸைதுலு. அங்குள்ள சிலகலூரி பகுதியில் வசித்து வருபவர் ஷேக் ஹசீனா (வயது 24). இருவரும் வெவ்வேறு கல்லூரியில் பயின்று வந்த நிலையில், தேர்வு எழுதச் சென்றபோது அறிமுகம் ஏற்பட்டு பழகி காதல் வயப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: அய்யோ... கடவுளே! மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்! இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!!

தோல்வி: 

இதனிடையே, தேர்வில் பாலா தோல்வி அடைய, ஹசீனா வெற்றி அடைந்து இருக்கிறார். பின் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு வேறொரு ஆணுடன் பழகி இருக்கிறார். இந்த தகவலை அறிந்த பாலா ஆத்திரமடைந்த நிலையில், தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் காதலியை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். 

Crime news

ஆசைவார்த்தை: 

அதன்படி, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த காதலிக்கு தொடர்புகொண்ட பாலா, உன்னை பார்க்க வேண்டும் என காதல் வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளார். இதனை ஏற்று வெளியே வந்த காதலியை இருசக்கர வாகனத்தில் ஆட்கள் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று, வேறொரு ஆணுடன் பழகுவது குறித்து கேட்டுள்ளார். அங்கு வாக்குவாதம் ஏற்படவே, காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த், உடலை எரித்துள்ளார். 

விசாரணை: 

பின் ஒன்றும் தெரியாததுபோல பாலா வீட்டுக்குச் சென்றுவிடவே, மகள் மாயமானது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது ஹசீனாவின் சடலம் 80 % எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவர் இறுதியாக பேசியதன் அடிப்படையில் பாலா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது உண்மை அம்பலமானது. இதனையடுத்து காதலனை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: 16 வயது சிறுமி சித்ரவதை & கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. அசாமில் படுபயங்கரம்..!