ஆடி மாத சிவராத்திரியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கஜகேசரி யோகம் ! ஜூலை 23 அன்று அதிஷ்டம் பெரும் மூன்று ராசியினர்கள்!



aadi-sivaratri-gajakesari-yogam-3-rasi-benefits

இந்த ஆண்டு ஆடி மாதம் ஆன்மிக பரவசத்துடன் தொடங்கியுள்ளது. ஆடி மாதம், இறைவழிபாட்டுக்கும், சக்தி பூஜைக்கும் மிகவும் சிறந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் ஆடி சிவராத்திரி நாளான ஜூலை 23 அன்று ஒரு மிகுந்த சக்தி வாய்ந்த ஜோதிட நிகழ்வு நடைபெற உள்ளது. இது தான் கஜகேசரி ராஜயோகம்.

100 வருடங்களுக்குப் பிறகு, அதுவும் ஆடி மாத சிவராத்திரி நாளில் இவ்வாறு கஜகேசரி யோகம் உருவாவது மிகவும் அரிதானதும்தான். இந்த யோகம் மூன்று முக்கிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தரவுள்ளது. இதில் குறிப்பாக சந்திரன் மற்றும் குரு போன்ற கிரகங்களின் அமைப்பால் இந்த யோகம் ஏற்படுகிறது. கீழ்க்காணும் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பெரும் நன்மைகளை வழங்கும் என நம்பப்படுகிறது:

ரிஷப ராசி:

முயற்சிகளில் தைரியம் மற்றும் உறுதி பெருகும். உங்கள் திறமை, உழைப்பு மேலதிகாரிகள் கண்களில் படும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள், மறுபடி காத்திருந்த பணம் கைக்கு வரும். மார்க்கெட்டிங், வங்கி, ஊடகம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம்.

சிம்ம ராசி:

தொடர்ந்து வந்த உழைப்பிற்கு இப்போது நிதி பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள், ஊதிய உயர்வு, சொத்து பிரச்சனைகள் தீர்வு, முதலீடுகளின் மூலம் லாபம் கிடைக்கும். பண நெருக்கடி குறைந்து, மனஅமைதி பெருகும்.

துலாம் ராசி:

வாழ்க்கையில் நேர்மறை மாற்றம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் நகரத் தொடங்கும். வணிக வளர்ச்சி, பதவி உயர்வு, பேச்சுத் திறனில் செல்வாக்கு ஆகியவை கூடும். ஆன்மிக ஆர்வம், தியானம், யாத்திரை போன்ற செயல்களில் ஈடுபாடு உருவாகும்.

இவை அனைத்தும் பல்வேறு ஜோதிட நூல்கள், ஊடகங்கள், பஞ்சாங்கங்கள், மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. நம்பிக்கையாக மட்டுமே எடுத்துக்கொள்ளவும்.