உலக கோப்பை டி-20 தொடர்: பாகிஸ்தானை பதம் பார்த்த ஜிம்பாவே அணிக்கு திரில் வெற்றி..!

உலக கோப்பை டி-20 தொடர்: பாகிஸ்தானை பதம் பார்த்த ஜிம்பாவே அணிக்கு திரில் வெற்றி..!



Zimbabwe won the match against pakistan by 1 run in super 12 round

எட்டாவத் உலக கோப்பை டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற  போட்டியில் ஜிம்பாப்வே-பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்ஸி-கிரேக் எர்வின் ஜோடி தொடக்கம் அளித்தது. சுமாரான தொடக்கம் அளித்த தொடக்க ஜோடியில் வெஸ்லி 17 ரன்களும் கிரேக் எர்வின் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்ன்ர் 131 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான்-பாபர் ஆசம் ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஜோடியில் பாபர் ஆசம் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், முகமது ரிஸ்வான் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

பொறுப்புடன் ஆடி அணியை தூக்கி நிறுத்திய ஷான் மசூத் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய இப்திகார் அகமது 5 ரன்களும், ஷதாப் கான் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்தது.

முன்னதாக சூப்பர் 12 சுற்றில் தனது பரம் எதிரியான இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, ஜிம்பாவேயுடனான 2 வது போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றியை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.