இது நல்லதல்ல.! கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.! ஓப்பனாக பேசிய யுவராஜ்.!

இது நல்லதல்ல.! கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.! ஓப்பனாக பேசிய யுவராஜ்.!


yuvaraj-talk-about-last-test

இரண்டு நாட்களில் போட்டி நிறைவடைந்தது, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதா எனத் தெரியவில்லை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது. அகமதாபாத் மைதானம்  சுழற்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்ததால், இரு அணி வீரர்களுமே பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-1 என தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய வீரர் யுவராஜ் சிங், இரண்டு நாட்களில் போட்டி நிறைவடைந்தது, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதா எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இந்திய அணி வெற்றிக்கு பின் யுவராஜ் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டே நாட்களில் போட்டி முடிந்தது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

இது போன்ற ஆடுகளத்தில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் பந்து வீசியிருந்தால் அவர்கள் 1000, 800 விக்கெட்டுகள் எடுத்திருப்பார்கள். எப்படியிருந்தாலும் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் மற்றும் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள்" என யுவராஜ் பதிவிட்டுள்ளார்.