விராட் கோலி சாதனையை எளிதில் முறியடித்த இளம் கிரிக்கெட் வீரர்! குவிந்துவரும் பாராட்டுகள்!

விராட் கோலி சாதனையை எளிதில் முறியடித்த இளம் கிரிக்கெட் வீரர்! குவிந்துவரும் பாராட்டுகள்!


young palyer beat virat record

சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று  சிங்கப்பூர் மற்றும் நேபாள அணிகள் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணி தலைவர் டிம் டேவிட் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அந்த அணி 151 ரன்களை எடுத்தது. இதனிஆயடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள அணி அராம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினர். நேபாள கேப்டன் பரஸ் கட்கா பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்க விட்டார். அவர் 49 பந்துகளில் சதம் அடித்து சாதனைப்படைத்தார்.

Virat Kohli

இதன் மூலம் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி வீரர்கள் கூட இதுவரை டி20 போட்டிகளில் சதமடிக்காத நிலையில் இந்த அரிய உலக சாதனையை படைத்த முதல் கேப்டனாக பரஸ் கட்கா அசத்தியுள்ளார். இந்த வகையில் நெதர்லாந்தின் கேப்டன் பீட்டர் சீலர் 12 நாட்களுக்கு முன்பாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் எடுத்ததே ஒரு கேப்டனின் அதிகபட்ச றன்னக இருந்தது.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (90 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக), மேற்கு இந்திய தீவுகளின் கிரிஸ் கெய்ல் (88, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக), விராட் கோலி (82, இலங்கைக்கு எதிராக) என முன்னணி அணிகளின் கேப்டன்கள் கூட இந்த வரிசையில் பின்தங்கியுள்ளனர். இந்த நிலையில் இவரது சாதனையை உலக கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.