
yesterday match rohtsharma out
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற 34-ஆவது லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவே ரன்களை சேகரித்தனர். நேற்றைய ஆட்டத்தில் ரோகித்சர்மாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் மற்றும் ராகுல் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போது, ரோகித் சர்மா 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
முதலில் நடுவரிடம் ரோகித்திற்கு அவுட் கேட்ட போது, கொடுக்கப்படவில்லை, அதன் பின் மூன்றாவது நடுவரிடம் சென்ற போது, அது அவுட் என்று கொடுக்கப்பட்டது. ஆனால் டிவி ரீப்ளேயில் பந்தானது பேட்டில் பட்டதா என்று தெளிவாக தெரியவில்லை, இதனால் அவுட் இல்லாததை நடுவர் அவுட் கொடுத்துவிட்டதாக இந்திய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
Advertisement
Advertisement