பானிபூரி விற்று, சாப்பாடு இல்லாமல், தங்க இடமின்றி தவித்து வந்த இளைஞர்! ஐபிஎல் மூலம் கோடீஸ்வரரான அதிசயம்!

பானிபூரி விற்று, சாப்பாடு இல்லாமல், தங்க இடமின்றி தவித்து வந்த இளைஞர்! ஐபிஎல் மூலம் கோடீஸ்வரரான அதிசயம்!



yashaswi keiswal bought in 2 crores by rajastan royals

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். 17 வயது நிறைந்த இவருக்கு கிரிக்கெட் மீதும், சச்சின் மீதும் இருந்த அளவில்லா காதலால் அவர் தனது 11வயதிலேயே கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக மும்பைக்கு குடிபெயர்ந்ததுள்ளார். ஆனால் அங்கு வந்த அவர் தங்க இடமில்லாமல் அடுத்தவேளை உணவிற்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் அவரது தந்தை மீண்டும் தனது ஊருக்கே சென்றுள்ளார்.

ஆனால் ஜெய்ஸ்வால் மட்டும் மும்பையிலேயே தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் யாருடைய உதவியும் இன்றி,  தங்க இடம் இல்லாமல், உணவில்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர் மாலை நேர பானிபூரி கடைகளில் வேலைக்கு சேர்ந்துள்ளார். பின்னர் பகலில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

yashshwi jeiswal

 இந்நிலையில் அவரது பயிற்சியாளர் ஒருவர்,  நீ நன்றாக  விளையாடினால் உனக்கு கூடாரம் அமைத்து தருகிறேன் என கூறியதை கேட்டு அவர் சிறப்பாக விளையாடி  தனக்கென தங்குவதற்கு ஒரு கூடாரத்தை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரது விளையாட்டு திறனை கண்டு பலரும் அவருக்கு உதவ தானே முன்வந்துள்ளனர்.

பின்னர் விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதமடித்து பிரபலமான அவர்  19 வயது குறைவான இந்திய அணியில் இடம் பெற்றார். இந்நிலையில் ஜெய்ஸ்வால் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் 2.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டு உள்ளார். இது அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.