நாளை நடக்கவிருக்கும் உலககோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியின் நடுவர்கள் யார் யார்.? வெளியான தகவல்...

நாளை நடக்கவிருக்கும் உலககோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியின் நடுவர்கள் யார் யார்.? வெளியான தகவல்...


World Cup cricket match semi final  referees details

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்தத் தொடரில் அரை இறுதி போட்டிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மும்பையிலும், அதனை தொடர்ந்து மறுநாள் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தாவிலும் மோத உள்ளன.

தற்போது இந்த போட்டிகளிலும் இடம் பெறும் நடுவர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை நடைபெற இருக்கும் அரை இறுதி போட்டிக்கு ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ராட் டக்கர் கள நடுவர்களாகவும், ஜோயல் வில்சன் 3வது நடுவராகவும், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் 4வது நடுவராகவும், ஆண்டி பைகிராப்ட் போட்டி நடுவராகவும் செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் அடுத்த நாள் நடைபெற இருக்கும் அரை இறுதி போட்டிக்கு ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் நிதின் மேனன் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேப்னி 3வது நடுவராகவும், மைக்கேல் கோப் 4வது நடுவராகவும், ஜவகல் ஸ்ரீநாத் போட்டி நடுவராகவும் செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.