பாகிஸ்தானை பந்தாடிய ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி; பாபர் அசாம் சதம் அடித்தும் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்.! - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடிய ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி; பாபர் அசாம் சதம் அடித்தும் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்.!

உலக கோப்பை போட்டித் தொடர் இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் தொடரானது ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்க இந்திய அணி கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது.
 
மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. பிரிஸ்டாலில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் (32), பஹர் ஜமான் (19) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த ஹரீஸ் சோகைல் (1), முகமது ஹபீஸ் (12) ஏமாற்றினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்தும் நின்ற பாபர் அசாம் (112) சதம் அடித்து மிரட்ட, பாகிஸ்தான் அணி 47.5 ஓவரில் 262 ரன்கள் எடுத்து ‘ஆல் அவுட்டானது.’ 

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆப்கான் அணிக்கு முகமது செஷாத் (23), ஜஜாய் (49) நல்ல துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா (32), சின்வாரி (22) ஓரளவு கைகொடுத்தனர். 

ஒருபுறம் அடுத்ததடுத்து விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம், நிலைத்து நின்று விளாசிய ஷாகிதி (74*) அரைசதம் கடந்து அசத்த, ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo