தென் ஆப்பிரிக்காவை தவிடுபொடியாக்கிய வங்கதேசம் அசத்தல் வெற்றி.!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் தன் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்கா. இதனால் வங்கதேச அணியை வீழ்த்தும் முனைப்பில் நேற்று இரண்டாவது போட்டியில் களமிறங்கியது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சை வங்கதேச அணி தாக்குப்பிடிக்குமா? என்பதே பலரின் சந்தேகமாக இருந்தது.
Shakib Al Hasan starred with bat and ball in Bangladesh's win over South Africa, and he was justly crowned the OPPO 'Shot Maker' of the day. Some of his shots were 😍 #BeAShotMaker pic.twitter.com/oCLEIKwFJL
— ICC (@ICC) June 3, 2019
ஆனால் நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்த வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பாஒ 16, செளமியா சர்கார் 42 ரன்கள் என 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் வலுவான அடித்தளம் அமைத்தனர்.
அடுத்து இணை சேர்ந்த சகிப்-அல்-ஹசன் & முஷ்பிகுர் ரஹிம் 142 ரன்கள் பார்ண்டர்ஷிப் கொடுத்தனர். இதன் மூலம் வங்கதேச ரன் வேகமாக முன்னேறியது. அடுத்து வந்த முகமது மிதுன் 21, முகமதுல்லா 46, ஹொசைன் 26 ரன்கள் என அடித்து நொருக்க 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 330 ரன்களை குவித்தனர்.
Three sixes, one of which was spectacularly caught by an alert photographer, make up the candidates for the @Nissan Play of the Day in Bangladesh's #CWC19 victory over South Africa.
— ICC (@ICC) June 2, 2019
Vote for your favourite 👇 https://t.co/7SsrSjNv2c pic.twitter.com/KUYIkWw8U5
331 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் டி காக் 23 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். எய்டன் மார்கிரம் 45, பாப் டு ப்ளேசிஸ் 62 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தனர்.
அடுத்து வந்த டேவிட் மில்லர் 38, டஸ்ஸன் 41, டுமினி 45 ரன்கள் குவித்தனர். ஆனால் இடையிடையே விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால் தென்னாப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்ரிக்கா அணி 309 ரன்களை எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Three wickets for @mustafiz90 as the @bcbtigers opened their #CWC19 campaign with a triumph over South Africa in London ✅
— ICC (@ICC) June 2, 2019
Watch all of the Protea wickets fall here, including the calamitous run out that started it all 😱 #SAvBAN #RiseOfTheTigers pic.twitter.com/27xM3AJBtS
இதன் மூலம் இங்கிலாந்து, வங்கதேசம் என தொடர்ச்சியாக இரட்டை தோல்வியுடன் தென் ஆப்ரிக்கா உலகக் கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.