முதல் வெற்றியை ருசிப்பது யார்? இந்தியாவா தென்னாப்பிரிக்காவா துவங்குகிறது இன்று பலபரீட்சை.!



world cup 2019 - india vs south africa - today match

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவோடு இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. இதற்கு முன்னர் நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

World cup 2019

இதனால் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அதேவேளையில் உலக கோப்பை தொடரில் முதல் போட்டியை ஆடும் இந்திய அணி முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று வெற்றியுடன் மற்ற போட்டிகளை எதிர்கொள்ளும் உத்தேசத்துடன் உள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனால் இன்றைய போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். மற்ற தொடர்களில் சிறப்பாக ஆடும் தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதுவரை அந்த அணி ஒருமுறை கூட உலக கோப்பையை  வெல்லாதது ஒரு பெரிய குறையாக உள்ளது.

World cup 2019

இந்நிலையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பியூரன் ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தோள்பட்டை காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டுவந்த டேல் ஸ்டெய்ன்  உலகக்கோப்பை போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக இருக்கும்.