குறைவான வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ள இந்தியா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்துமா.!

குறைவான வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ள இந்தியா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்துமா.!


world cup 2019 - 34th leek - india vs westindies

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் 34-ஆவது லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வின் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவே ரன்களை சேகரித்தனர். ஆனால் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு விராட் கோலியும் கேஎல் ராகுலும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த போராடினர். சிறப்பாக ஆடி வந்த கேஎல் ராகுல் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தது வெளியேறினார்.

World cup 2019

அடுத்து அடுத்து களம் இறங்கிய விஜய் சங்கர், கேதர் ஜாதவ் இருவரும் சொற்ப ரன்களில் விரைவாக ஆட்டமிழந்ததனர். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் குறைந்தது. கேப்டன் விராட் கோலி மட்டும் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசியில் அவரும் 72 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

6 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனி, ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக ஆடி ஓரளவு கை கொடுத்தனர். பாண்டியா 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் இருந்த தோனி 56 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை எடுத்துள்ளது.