அரையிறுதிக்கு முன் அணியை வலுப்படுத்த அருமையான சந்தர்ப்பம்! மீண்டும் வலுப்பெறுமா இந்திய அணி?

அரையிறுதிக்கு முன் அணியை வலுப்படுத்த அருமையான சந்தர்ப்பம்! மீண்டும் வலுப்பெறுமா இந்திய அணி?



will india become strong before semifinal

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும்பொழுது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகவும் வலிமையான அணியாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு சில வீரர்களின் இறப்பால் அணி சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஆனா விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி என ஒரு வலிமையான வரிசை இருந்து வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நான்காவது இடத்தில் பொருத்தமாக அமைந்தார் கேஎல் ராகுல். ஆனால் ஷிகர் தவான் இழப்பால் கேஎல் ராகுல் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க நேர்ந்தது. மீண்டும் நான்காவது இடத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் கூட்டணியாக இருந்த இந்திய அணியில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனால் கேஎல் ராகுல் ஒருவழியாக கடந்த ஆட்டங்களில் சமாளித்து வருகிறார்.

wc2019

நடுநிலை ஆட்டக்காரர்களை பொருத்தவரை தோனி மற்றும் கார்த்திக் பாண்டியா ஓரளவிற்கு சமாளிக்கும் வண்ணம் ஆடி வருகின்றனர். இடையில் வாய்ப்பு வழங்கப்பட்ட விஜய் சங்கர் தனது திறமையை நிரூபிக்கும் முன்பே காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். பல ஆட்டங்களில் வாய்ப்பு கொடுத்தும் சரியாக ஆடாத கேதர் ஜாதவிற்கு பதிலாக கடந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கொடுத்த வாய்ப்பை தவறவிட்டார். கடந்த இரண்டு ஆட்டங்களில் நான்காவதாக களமிறங்கிய ரிசப் பந்த் 2 ஆட்டங்களிலும் 30 ரன்களுக்கு மேல் எடுத்து சற்று ஆறுதலாக ஆடி வருகிறார்.

இந்நிலையில் சற்று தடுமாற்றத்துடன் இருக்கும் இந்திய அணியின் பேட்டிங்கை அரையிறுதிக்கு செல்வதற்கு முன்பே சரிசெய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் அந்த குழப்பத்தை இந்திய அணி சரி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பந்துவீச்சில் முகமது சமி அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் கடைசி ஓவர்களில் அதிக ரன்களையும் விட்டுக் கொடுத்து விடுகிறார். எனவே அவரும் இதனை சரிசெய்ய இன்றைய போட்டி நல்ல வாய்ப்பாக அமையும். சுழல் பந்து வீச்சிலும் இங்கிலாந்திற்கு எதிராக குல்தீப் யாதவ் மற்றும் சாகல் இருவருமே அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் இருவரும் மீண்டும் அரை இறுதிக்கு முன்பு புத்துணர்ச்சி பெற வேண்டும்.

wc2019

இந்திய அணி இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை ஆடியுள்ள 7 ஆட்டங்களில் இங்கிலாந்திடம் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. அரையிறுதியிலும் கிட்டத்தட்ட இங்கிலாந்தை தான் எதிர்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. எனவே மீண்டும் வலிமையான இங்கிலாந்து அணியை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இந்திய அணி இன்று தன்னை வலிமைப்படுத்த வேண்டி உள்ளது. பார்ப்போம் என்ன செய்கிறார்கள் இந்திய வீரர்கள் என்று!