விளையாட்டு WC2019

எட்டாத உயரத்தில் ஸ்டார்க்; துரத்தி பிடிப்பாரா நம்பர் 1 பௌலர் பும்ரா!

Summary:

Will Bumrah beat starc in wc19

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் கலந்துகொண்ட 10 அணிகளில் 6 அணிகள் முதல் சுற்று முடிவில் வெளியேறிவிட்டன. முதலிடம் பிடித்த 4 அணிகள் மட்டும் அரையிறுதிக்குள் முன்னேறியுள்ளன. புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 

அந்த 4 அணிகளில் இந்தியா-நியூசிலாந்து முதல் அரையிறுதியிலும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இரண்டாவது அரையிறுதியிலும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணிகள் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். 

9 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். 2007 உலகக்கோப்பையில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத்தின் சாதனை முறியடிக்க ஸ்டார்க்கிற்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே தேவை. 

2019 உலகக்கோப்பையில் இதுவரை ஸ்டார்க்கிற்கு அடுத்த இடங்களில் பங்களாதேஷ் அணியின் முஷ்தாபிசூர் ரஹ்மான்(20), இந்தியாவின் பும்ரா(17), இங்கிலுந்தின் ஆர்ச்சர்(17), பாக்கிஸ்தானின் அமீர்(17) ஆகியோர் உள்ளனர். இதில் பும்ரா மற்றும் ஆர்ச்சர் மட்டுமே ஸ்டார்க்கிற்கு போட்டியாக உள்ளனர். 

இருப்பினும் அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி 9 விக்கெட்டுகள். ஒருவேளை இந்திய அணி அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டி வரை சென்றால் ஸ்டார்க்கை பின்னுக்கு தள்ளி பும்ரா முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் ஸ்டார்க்கும் இன்னும் 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு உள்ளது.
 


Advertisement