
Why shami dropped out in semifinal
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இன்று மீண்டும் ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சேர்க்கப்படாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உலகக்கோப்பை தொடரில் முகமது சமி 4 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட் அடங்கும். குறிப்பாக முதல் 10 ஓவர்களில் இந்திய அணிக்கு விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து முகமது சமி சேர்கப்படாதது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது என சமியின் பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக் தெரிவித்துள்ளார். IANS செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், " அரையிறுதியில் முகமது சமி நீக்கிவிட்டு புவனேஷ் குமார் குமார் சேர்த்தது கட்சியாய் உள்ளது. 4 போட்டிகளில் 14 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஒரு வீரரை எப்படி விலக்கி வைக்க முடியும்? இதற்கு மேல் ஒரு வேகப்பந்துவீச்சாளரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது அரையிறுதியில் விளையாட வைக்க தான் என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் இப்போது ஏமாற்றமே மிஞ்சியது. சமியை விட புவனேஸ்வர் குமார் சற்று சிறப்பாக பேட்டிங் செய்வதால் தான் அவரை தேர்வு செய்தார்கள் என்றால் அது மிகவும் முட்டாள்தனம். துவக்கத்தில் உள்ள சிறப்பான 6 பேட்ஸ்மேன்கள் செய்யத் தவறியதையா புவனேஸ்வர் குமார் செய்து விடப் போகிறார்?
இந்தியாவிற்கு தனது பந்துவீச்சின் மூலம் வெற்றியை தேடித் தருவது தான் சமியின் இலக்கு. அதை அவர் சரியாக செய்துள்ளார். அப்படியிருந்தும் அரையிறுதியில் சேர்க்கப்படாதது ஏன்? கடைசியாக west indies அணிக்கு எதிராக ஆடியதற்குப் பிறகு நான் சமியிடம் பேசினேன். அப்போது அவர் நல்ல உடல்நிலையில் தான் இருந்தார். ஒருவேளை அதற்குப் பிறகு உடல்நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமா என்று மட்டும் எனக்கு உறுதியாக தெரியவில்லை"" எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement