ஆட்டநாயகன் விருதால் உருவான சர்ச்சை! முகமது சமிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் ரசிகர்கள்Why not shami did get man of the match

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பாக்கிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக முதல் பாதியில் ஆடும் லெவனில் இடம்பெறாத முகமது சமி கடந்த இரண்டு ஆட்டங்களில் ஆடியுள்ளார்.

wc2019

இரண்டு போட்டிகளிலுமே சிறப்பாக பந்து வீசிய முகமது சமி இரண்டு போட்டிகளிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தினார். 

ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தியதாலும் குறைந்த ரன்களே விட்டுக்கொடுத்ததாலும் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் சமி.


இதனால் நேற்றைய ஆட்டத்தில் சமிக்கு தான் ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் 72 ரன்கள் எடுத்த கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இதனால் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் அணியின்  வெற்றிக்கு பெரும்பங்கினை அளித்த முகமது சமிக்கு ஒரு ஆட்டநாயகன் விருது கூட ஏன் வழங்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதரவாக பேசி வருகின்றனர்.