ரஞ்சி டிராபியில் ஜடேஜாவை விளையாட அனுமதிக்காதது ஏன்? கங்குலிக்கு எதிராக எழும் சராமரி கேள்வி!

ரஞ்சி டிராபியில் ஜடேஜாவை விளையாட அனுமதிக்காதது ஏன்? கங்குலிக்கு எதிராக எழும் சராமரி கேள்வி!



Why Jadeja not allowed to play ranji final

சர்வதேச போட்டிகளை கருத்தில் கொண்டு ஜடேஜாவை ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விளையாட அனுமதிக்க முடியாது என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய மாநில அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி கோப்பைக்கான தொடரின் இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி துவங்குகிறது.

jadeja

இந்த போட்டியில் சௌராஷ்டிராவின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை விளையாட அனுமதிக்க முடியாது என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துவிட்டதாக சௌராஷ்டிரா கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்தேவ் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், "தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் மார்ச் 12 ஆம் தேதி துவங்குவதால் மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஜடேஜாவை அனுபதிக்க முடியாது என்றும், நாடு தான் முதலில் முக்கியம் என்றும் கங்குலி கூறிவிட்டார். சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா தனது அணிக்காக உள்நாட்டில் விளையாடுவதில் என்ன தவறு. இதே போல் முகமது சமியும் பெங்கால் அணிக்காக விளையாடினால் அதுவும் சிறப்பு தானே.

jadeja

ஐபிஎல் தொடரில் பல கோடி ரூபாய் வருமாணம் வருவதால் அந்த தொடர் நடைபெறும் சமயத்தில் மட்டும் எந்த சர்வதேச தொடரும் நடைபெறாதவாறு பார்த்துகொள்கின்றனர். ஆனால் முக்கியமான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியை கருத்தில் கொள்ளமாட்டார்கள்.

ஐபிஎல் தொடருக்காக சர்வதேச போட்டிகளை மாற்றும்போது ரஞ்சி கோப்பைக்கான இறுதிப்போட்டியின் போதும் சர்வதேச தொடர்கள் நடத்தாதவாறு செய்தால் அணைத்து வீரர்களும் தங்கள் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் நட்பத்திர வீரர்கள் பங்குபெற்றால் இந்த தொடரையும் மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பிபர்" என தெரிவித்துள்ளார்.