விளையாட்டு

ரெய்னா விஷயத்தில் தோனி தொடர்ந்து பிடிவாதம்... வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Why dhoni not interested to get back raina in csk

ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள கடந்த மாதம் துபாய்க்கு சென்ற சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னாவும் இருந்தார். ஆனால் குவாரண்டைன் காலம் முடிவதற்குள்ளேயே சொந்த பிரச்சனை காரணமாக ரெய்னா இந்தியா திரும்பினார்.

மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்தார். இதற்கான உண்மையான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. ரெய்னாவின் மாமா குடும்பத்தில் நடந்த கொலைவெறி தாக்குதல் தான் காரணம் என கருதப்பட்டது.

சமீபத்தில் ரெய்னா மீண்டும் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்த்துகொள்ள உடன்பாடு இல்லை என தெரிகிறது.

இதற்கு காரணம் குவாரண்டைன் காலத்தில் ரெய்னா விதிமுறைகளை மீறியதாகவும், இதனால் தோனிக்கும் ரெய்னாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தான் ரெய்னா நாடு திரும்பிவிட்டார் எனவும் கருதப்படுகிறது.


Advertisement