விளையாட்டு Ipl 2019

சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் அடிக்காதது ஏன்! தவான் கூறிய பெருந்தன்மையான பதில்

Summary:

Why dhawan missed the century

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இளம் வீரர் சுபம் கில் மற்றும் ரசலின் வழக்கமான அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது. சுபம் கில் 65, ரசல் 45 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட துவங்கியது. அந்த அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாய் இருந்தார். 18.5 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் ஷிகர் தவான் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் அணியின் வெற்றியை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை தவான் நழுவவிட்டார்.

டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அதே நேரத்தில் தவான் சதம் அடிக்க வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தும் தூக்கி அடித்து சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்றும் அணியின் வெற்றி தான் முக்கியம் என தோன்றியதாக தவான் கூறியுள்ளார். 

காரணம், ஏற்கனவே பஞ்சாப் அணியுடன் டெல்லி அணி ஆடிய பொழுது சிறப்பாக ஆடிய ரிஷப் பன்ட் அவுட் ஆன பிறகு டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து தோல்வியை சந்தித்தது. அதே நிலை இந்த ஆட்டத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் பொறுமையாக ஆடியதாக தவான் கூறியுள்ளார்.


Advertisement