என்னதான் ஆச்சு பும்ராவிற்கு..! ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகாதது ஏன்..?

என்னதான் ஆச்சு பும்ராவிற்கு..! ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகாதது ஏன்..?


Why bumrah misses out Asia cup

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள பிசிசிஐ பும்ராவை தேர்வு செய்யாதது ஏன் எனவும் விளக்கம் அளித்துள்ளது. 

பும்ரா கடைசியாக கடந்த ஜூலை 14 ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின்னர் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

bumrah

மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காகவே பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக ரசிகர்கள் எண்ணினர். ஆனால் தற்போது அவருக்கு முதுகு புறத்தில் சதை பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆசியக் கோப்பை தொடருக்கு தேர்வாகவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டும் இந்த முடிவினை பிசிசிஐ எடுத்து இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.