வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
ஐபில் 2019: கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புடைய அணி எது தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இரண்டாவது சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் டெல்லி, கைதராபாத் அணிகள் மோதும் இரண்டாவது ஆட்டம் இன்று இரவு 7 . 30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி சென்னை அணியுடன் மோதும். அந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி மும்பை அணியுடன் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இறுதி போட்டியில் மோதும்.
இந்த சீசனில் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புடைய அணி எது என்று பார்த்தால் மும்பை அணி அணிக்கு அதிக வாய்ப்புள்ளது. மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே அந்த அணிக்கு மிகவும் சாதகமா உள்ளது. கிரண் பொல்லார்ட், பாண்டியா சகோதரர்கள், டீகாக், மயங் போன்ற அதிரடி வீரர்கள் மும்பை அணிக்குக்கு மிகவும் பக்க பலமாக உள்ளனர்.
இவர்களில் ஒருவர் சொதப்பினாலும் மீதமுள்ள வீரர்கள் சிறப்பாக விளையாடி அந்த அணியை வெற்றிபெற செய்கின்றனர். பவுலிங்கை பொறுத்தவரை மலிங்கா, பாண்டியா, அல்சாரி ஜோசெப் போன்ற வீரர்களின் பந்து வீச்சு மிக அபாரமாக உள்ளது மும்பை அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.