இந்த முறை ஐபில் கோப்பை இந்த அணிக்குத்தான்!! அவங்க வாங்காட்டி அப்போ இவங்கதான்!! அடித்து கூறும் பிரபலம்..



Who will won ipl season 14 Michael Vaughan predict

இந்தமுறை எந்த அணி ஐபில் கோப்பையை வெல்லும் என தனது கருத்தினை கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் .

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி பெங்களூரு அணியுடன் விளையாடுகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் விளையாட உள்ளது.

ipl

இந்நிலையில் ஐபில் போட்டிகளுக்காக அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இந்த முறை எந்த அணி ஐபில் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தமுறையும் நடப்பு சாம்பியான மும்பை அணிதான் கோப்பையை வெல்லும் என தனது கருத்தை கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

ipl

ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங் குறித்து பல்வேறு மோசமான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மைக்கேல் வாகன். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த முறை மும்பை அணிதான் ஐபில் கோப்பையை வெல்லும் எனவும், ஒருவேளை மும்பை அணி தவறினால் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி ஐபில் கோப்பையை வெல்லும் என கூறியுள்ளார்.